Sunday, 16 July 2017

திணைமாலை 136 Tinaimalai 136

எங்கை இயல்பின் எழுவல்யாழ்ப் பாண்மகனே
தங்கையும் வாயும் அறியாமல் - இங்கண்
உளர உளர உவன்ஓடிச் சால
வளர வளர்ந்த வகை.

பாணன் தூதினைத் தலைவி மறுத்துப் பேசுகிறாள். 

என் தங்கையர் போல் யாழில் இசை எழுப்பும் பாண்மகனே!
என் மகன் தன் கையும் வாயும் அறியாமல் மீண்டும் மீண்டும் உளரிக்கொண்டு இங்கே இருக்கும்போது 
அவன் அங்கே பரத்தையர் வீட்டுக்கு ஓடி அவர்கள் வளரும்படி அவன் செய்த வகை இதுதான்.
மகனையும் பார்க்காதது. 

கணிமேதாவியார் இயற்றிய திணைமாலை நூற்றைம்பது - மருதம்

No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி