Sunday, 16 July 2017

திணைமாலை 135 Tinaimalai 135

என்கேட்டி ஏழாய் இருநிலத்தும் வானத்தும்
முன்கேட்டும் கண்டும் முடிவறியேன் - பின்கேட்(டு)
அணியிகவா நிற்க அவன்அணங்கு மாதர்
பணி இகவான் சாலப் பணிந்து.

காமக் கிழத்தி தன் தோழியிடம் சொல்கிறாள். 

பெண்ணே!
நான் சொல்வதைக் கேள். 
இந்தப் பெரிய நில உலகத்திலும் வானுலகிலும் கேட்டோ கண்டோ அறியாத முடிவு ஒன்று நிகழ்கிறது. 
அவன் மனைவி அவளைப் பிரியாததால் அவள் அணிகலன் கழலாமல் இருக்கிறாள். 
அவள் அழகில் மயங்கி காதல் கொண்டு அவள் பணித்ததற்கு மாறுபடாமல் மிகவும் பணிவாக அவளிடம் நடந்துகொள்கிறான்.

கணிமேதாவியார் இயற்றிய திணைமாலை நூற்றைம்பது - மருதம்

No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி