Sunday, 16 July 2017

திணைமாலை 134 Tinaimalai 134

கிழமை பெரியோர்க்குக் கேட்டின்மை கொல்லோ
பழமைப் பயன்நோக்கிக் கொல்லோ  - கிழமை
குடிநாய்கர் தாம்பல பெற்றோரின் கேளா
அடிநாயேன் பெற்ற அருள்

இவளுக்கு உரிமை உடைய பெரியோனுக்குக் கேடில்லா நல்ல காலமோ என்னவோ, 
பழமையானவை எப்போதாவது பயன்படும் என்பது  கருதியோ,  
உரிமை உடைய குடியின் நாயகர் பெற்றோர் கூறிய பல மொழிகளையும் கேளாத இவள் இவளது அடியொற்றி வாழும் நாயேனுடைய சொல்லைக் கேட்டுத் தலைவனை ஏற்றுக்கொள்ளும் அருளினை வழங்கியிருக்கிறாள். 

தன் தூது வாயிலைத் தலைவி ஏற்றுக்கொண்டதை எண்ணி விறலி மகிழ்ந்து கூறியவை. 

கணிமேதாவியார் இயற்றிய திணைமாலை நூற்றைம்பது - மருதம்

No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி