Sunday, 16 July 2017

திணைமாலை 133 Tinaimalai 133

அவள்
பாலையாழ்ப் பாண்மகனே பண்டுநின் நாயகற்கு
மாலையாழ் ஓதி வருடாயோ - காலையாழ்
செய்யும் இடமறியாய் சேந்தாநின் பொய்ம்மொழிக்கு
நையும் இடமறிந்து நாடு.

பாலைப் பண்ணை யாழில் மீட்டிக்கொண்டிருக்கும் பாணனே!
முன்பெல்லாம் உன் தலைவனுக்கு இன்பம் தரும் மாலைக்காலப் பண்ணை மீட்டி அவனை வருடிக்கொண்டிருந்தாய். 
காலைப் பண்ணை மீட்டும் இடம் தெரியாமல் இப்போது மீட்டுகிறாய். 
சேந்தி என்னை எடுத்துக்கொள்ளாமல் நீ கூறும் பொய்ம்மொழிக்காக உருகும் இடம் அறிந்து உன் கைவரிசையைக் காட்டு. 

பாணன் தூதினை ஏற்க மறுக்கும் தலைவி இவ்வாறு கூறுகிறாள். 

கணிமேதாவியார் இயற்றிய திணைமாலை நூற்றைம்பது - மருதம்

No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி