Sunday, 16 July 2017

திணைமாலை 132 Tinaimalai 132

தலைவி
ஒருத்தி
எங்கை யரில்உள்ளா னே,பாண நீபிறர்
மங்கையரில் என்று மயங்கினாய் - மங்கையரில்
என்னா திறவா திவணின் றிகந்தேகல்
பின்னாரில் லத்தின் முடிவு.

உன் தலைவன் என் தங்கையர் இல்லத்தில் உள்ளான். 
அவர்களின் இல்லத்தில் இருக்கும் பாணனே!
நீ வந்திருக்கும் என் இல்லத்தைப் பிற மங்கையர் இல்லம் என்று மயங்கினாய். 
பிற மங்கையர் இல்லம் என்று வரம்பைக் கடக்காமல் இங்கிருந்து போய்விடு. 
என் பின்னவர் இல்லத்தின் முடிவும் இதுதான். 

பாணன் தூதினை ஏற்க மறுக்கும் தலைவி இவ்வாறு கூறுகிறாள். 


கணிமேதாவியார் இயற்றிய திணைமாலை நூற்றைம்பது - மருதம்

No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி