Sunday, 16 July 2017

திணைமாலை 131 Tinaimalai 131

இறவு \ இறா மீன் போல்
யாழ்
மடங்கிறவு போலும்யாழ்ப் பண்பில்லாப் பாண
தொடங்குறவு சொல்துணிக்க  வேண்டா - முடங்கிறவு
பூட்டுற்ற வில்லேய்க்கும் பூம்பொய்கை ஊரன்பொய்
கேட்டுற்ற கீழ்நாள் கிளர்ந்து.

மடங்கும் இறா மீன் போன்ற தோற்றம் கொண்ட யாழை மீட்டிக்கொண்டு வரும் பண்பில்லாப் பாணனே!
உன் தலைவனுடன் உறவைத் தொடங்கும்படி சொற்களை உதிர்க்க வேண்டாம். 
முடங்கிக் கிடக்கும் இறா மீன் அம்பு பூட்டிய வில் போல் தோற்றம் தரும் அழகிய பொய்கைகள் நிறைந்த ஊரினை உடையவன் உன் ஊரன். 
அவன் "பிரியமாட்டேன்" என்று சொன்ன பொய்யைக் கேட்டு இப்போது துன்புற்றிருக்கும் கீழ்த்தரமான நாட்களை நினைவூட்ட வேண்டாம்.

பாணன் தூதினை ஏற்க மறுக்கும் தலைவி இவ்வாறு கூறுகிறாள். 


கணிமேதாவியார் இயற்றிய திணைமாலை நூற்றைம்பது - மருதம்

No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி