Sunday, 16 July 2017

திணைமாலை 130 Tinaimalai 130

இசையிரைக்கும் என்செய் திரம்நின் றவரை
வசையுரைப்பச் சாலா வழுத்தீர் - பசைபொறை
மெய்மருட் டொல்லா மிகுபுனல் ஊரன்தன்
பொய்மருட்டுப் பெற்ற பொழுது.

என் உடம்பு வாடி அவர் செய்திருக்கும் திரத்தை (வாடலை) நிறுத்திக் காட்டுகிறது. 
என் உடம்பு அவரைச் சொல்லிக் காட்டும் வசையைச் சொல்லி முடியாது. 
அவரை வாழ்த்திப் பேசவேண்டாம். 
அவன் ஊரன்.
என் மெய்யில் மருட்டும் பசலையை நான் பொறுத்துக்கொண்டிருக்கிறேன். 
ஊரன் பொய்யால் மருட்டி (அச்சுறுத்தி) என்னைப் பெற்றானே, அந்தப் பொழுதை எண்ணிப் பொறுத்துக்கொண்டிருக்கிறேன்.

வாயில் வேண்டி (தூது சொல்லி) வந்தவர்களிடம் தலைவி இவ்வாறு கூறுகிறாள். 


கணிமேதாவியார் இயற்றிய திணைமாலை நூற்றைம்பது - மருதம்

No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி