Sunday, 16 July 2017

திணைமாலை 129 Tinaimalai 129

புல்லகம்
வாடாத தாமரைமேல் செந்நெல் கதிர்வணக்கம்
ஆடா அரங்கினுள் ஆடுவாள் - நீடாய
புல்லகம் ஒக்கும் புகழ்வயல் ஊரன்தன்
நல்லகம் சேராமை நன்று.

வாடாத தாமரைப் பூவுக்கு மேலே செந்நெல் கதிர் வளைந்து வணங்கி ஆடும்.
அது ஆடாத அரங்கில் ஆடுபவள் போலத் தோன்றும்.
ஆடுபவள் புல்லகம் (தலை ஒப்பனையில் மாட்டித் தொங்கும் அணிகலன்) போல நெல்லங்கதிர் தோன்றும்.
இப்படிப்பட்ட புகழ் மிக்க வயல்களை உடைய ஊரன் அவன்.
அவன் நெஞ்சில் சேராமல் இருப்பதே ஒருவகையில் நல்லது.

தலைவன் பரத்தையிடம் இருக்கும்போது தலைவி இவ்வாறு நினைக்கிறாள்.

கணிமேதாவியார் இயற்றிய திணைமாலை நூற்றைம்பது - மருதம்

No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி