Sunday, 16 July 2017

திணைமாலை 127 Tinaimalai 127

அலங்கார நல்லார்
மென்கட் கலிவயல் ஊரன்தன் மெய்மையை
எங்கட்(கு) உரையா(து) எழுந்துபோ - இங்கண்
குலம்காரம் என்றணுகான் கூடும்கூர்த்(து) அன்றே
அலங்கார நல்லார்க்கு உரை.

மென்னிலப் பரப்பாக ஒலிக்கும் நீர் பாயும் வயல் சார்ந்த ஊரினை உடையவன் உன் தலைவன்.
அவனது உண்மைத் தன்மையை எங்களிடம் (நான் + என்மகன்) சொல்லாமல் எழுந்து போய்விடு.
அவன் குலமாகிய இந்தக் குலம் காரமாக இருக்கிறது என்று அணுகாமல் விரும்பிக் கூடியிருக்கிறான் அல்லவா,
தன்னை அலங்காரம் செய்துகொள்ளும் அந்த  நல்லவர்களிடம் சென்று நீ விரும்பியதைச் சொல்லு.

இவ்வாறு கூறித் தலைவி பாணன் தூதினை மறுக்கிறாள்.


கணிமேதாவியார் இயற்றிய திணைமாலை நூற்றைம்பது - மருதம்

No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி