Sunday, 16 July 2017

திணைமாலை 126 Tinaimalai 126

முளரி \ ரோஜா
விளரியாழ்ப் பாண்மகனே வேண்டா அழையேன்
முளரி மொழியா(து) உளரிக் - கிளரிநீ
பூங்கண் வயலூரன் புத்தில் புகுவதன்முன்
ஆங்கண் அறிய உரை.

யாழில் விளரிப்பண் பாடும் பாண்மகனே!
நான் உன்னை வேண்டவில்லை.
அழைக்கவும் இல்லை.
முளரிப் பூ போன்று முள்ளால் குத்தாதே.
உளரி என்னைக் கிண்டிப் பேசாதே.
அவன், உன் தலைவன் பூத்திருக்கும் வயல்களை உடைய ஊரன்.
அவன் புதிய இல்லத்தில் புகுவதற்கு முன்னர் அந்த இல்லத்துக்குச் சென்று அவன் வரவினைச் சொல்.

இவ்வாறு கூறித் தலைவி பாணன் தூதினை ஏற்க மறுக்கிறாள்.


கணிமேதாவியார் இயற்றிய திணைமாலை நூற்றைம்பது - மருதம்

No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி