Sunday, 16 July 2017

திணைமாலை 125 Tinaimalai 125

சிறுவன் துடி முழக்கல்
மாக்கோல்யாழ் பாண்மகனே மண்யானைப் பாகனார்
தூக்கோல் துடியொடு தோன்றாமுன் - தூக்கோல்
தொடியுடையார் சேரிக்குத் தோன்றுமோ சொல்லாய்
கடியுடையேன் வாயில் கடந்து

பெரிய அழகிய யாழினை மீட்டும் பாணனே!
என் மகன்
மண் யானையை இழுத்துச் செல்லும் பாகனாக இருக்கிறான்.
தூய கோலை வைத்துக்கொண்டு துடிப்பறையை முழக்குபவனாக இருக்கிறான்.
இவன் பிறப்பதற்கு முன்னர்
தூய வளையல்களை அணிந்த மகளிர் வாழும் சேரிக்குச் செல்லுமோ?
நீயே சொல்.
மணந்துகொண்டவளாகிய என் வாயிலைக் கடந்து செல்லுமோ?

இவ்வாறு கூறித் தலைவி பாணன் தூதினை மறுக்கிறாள்.

கணிமேதாவியார் இயற்றிய திணைமாலை நூற்றைம்பது - மருதம்

No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி