Sunday, 16 July 2017

திணைமாலை 124 Tinaimalai 124

சிறுவர் இழுக்கும் சீரார் தேர்
சிறுவர் இழுக்கும் கைவண்டி
செவ்வழியாழ்ப் பாண்மகனே சீரார்தேர்க் கையினால்
இவ்வழி ஈர்த்துப்பால் தோன்றாமுன் - இவ்வழியே
ஆடினான் ஆய்வயல் ஊரன்மற்(று) எங்கையர்தோள்
கூடினான் பின் பெரிது கூர்ந்து

யாழில் செவ்வழிப் பண் பாடிக்கொண்டு உன் தலைவனை ஏற்றுக்கொள்ளும்படி வேண்டும் பாணனே!
இதோ பார்
என் (அவன்) மகன் அழகிய கைவண்டித் தேரினை இழுத்துக்கொண்டு செல்கிறான்.
நான் அவன் உண்ணும் பால் ஊறிக்கிடக்கிடக்கிறேன்.
இப்படி நான் தோன்றுவதற்கு முன்னர் உன் ஆய்ந்த வயல்களை உடைய ஊரன் என்னுடன் விளையாடினான்.
இப்போது பெரிதும் விருப்பமுற்றவனாக என் தங்கையர் தோளினைத் தழுவிக்கொண்டு கிடக்கிறான்.

இப்படிச் சொல்லித் தலைமகன் தூதினை மறுக்கிறாள்.

கணிமேதாவியார் இயற்றிய திணைமாலை நூற்றைம்பது - மருதம்

No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி