Sunday, 4 June 2017

நாலடியார் 278 Naladiyar 278

தனதாகத் தான்கொடான்; தாயத் தவரும்
தமதாய போழ்தே கொடாஅர் - தனதாக
முன்னே கொடுப்பின் அவர்கடியார் - தான்கடியான்
பின்னை அவர்கொடுக்கும் போழ்து. 278

ஒருவன் தன்னிடமுள்ள பொருளைத் தன் உடைமையாக இருக்கும்போதே கொடுக்க மாட்டான். 
அவனுக்குப் பின்னர் அந்தப்  பொருளை அனுபவிக்கும் தாயத்தவரும் தமதானபோது கொடுக்க மாட்டார். 
அவன் தனதாக இருக்கும்போது கொடுத்திருந்தால் அவனது தாயத்தார் தடுத்திருக்க மாட்டார். 
அவனுக்குப் பின்னர் அவனது தாயத்தார் கொடுத்தால் அவன் வந்து தடுக்கப் போவதில்லை. 

பொருட்பால் - துன்பியல் - ஈயாமை

No comments:

Post a Comment

Blog Archive


இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.