Sunday, 2 April 2017

திணைமாலை நூற்றைம்பது 62 TinaiMalai 62

வில்லார் விழவினும் வேலாழி சூழுலகில்
நல்லார் விழவகத்தும் நாங்காணேம் - நல்லாய்
உவர்க்கத் தொரோவுதவிச் சேர்ப்பன் ஒப்பாரைச்
சுவர்க்கத் துளராயின் சூழ்.                           62
தலைமகளை ஒருநாள் கோலம் செய்து, அடியிற் கொண்டு முடிகாறும் நோக்கி, 'இவட்குத் தக்கான் யாவனாவன் கொல்லோ?' என்று ஆராய்ந்த செவிலிக்குத் தோழி அறத்தொடு நின்றது
வில் எய்து வழாக் கொண்டாடும் இடத்திலும்,
கடல் ஆழியானது சூழ்ந்திருக்கும் உலகத்தில்
மகளிர் கொண்டாடும் விழாவிலும்
நாம் காணமுடியாது
நல்லவளாகிய என் தாயே
அவன் உவர்க்கும் கடலோரத்தில் இவளுக்கு ஒப்பற்றதோர் உதவி புரிந்தவன்.
இவனுக்கு ஒப்பானவன் சுவர்க்கத்தில் இருப்பானாயின் தேடித்தான் பார்க்க வேண்டும்.
ஆதலால் அவனுக்கு இவளை, உன் மகளைத் திருமணம் செய்து கொடுத்துவிடலாம்.

நெய்தல்
கணிமேதாவியார் இயற்றிய திணைமாலை நூற்றைம்பது
யாப்பு – வெண்பா
காலம் – சங்கம் மருவிய கி. பி. மூன்றாம் நூற்றாண்டு.


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி