Sunday, 2 April 2017

திணைமாலை நூற்றைம்பது 61 TinaiMalai 61

அறிகரிது யார்க்கும் அரவநீர்ச் சேர்ப்ப
நெறிதிரிவார் இன்மையால் இல்லை - முறிதிரிந்த
கண்டலம் தண்தில்லை கலந்து கழிசூழ்ந்த
மிண்டலந்தண் தாழை இணைந்து.     61
தலைமகற்குத் தோழி இரவுக்குறி மறுத்தது
யாருக்கும் செல்லும் வழியைத் தெரிந்துகொள்வதென்பது அரிதாகும்.
ஆரவாரிக்கும் நீரினைக் கொண்ட சேர்ப்பு நிலத் தலைவனே,
வழியில் அடிக்கடி செல்பவர் யாரும் இல்லை. அதனால் வழி தூர்ந்து கிடக்கும்.
தளிர்கள் வளைந்திருக்கும் கண்டல் (நீர்முள்ளி) தில்லை மரங்களோடு கலந்து வளர்ந்திருக்கும் கழிமுகம் இது.
இவற்றோடு தாழை மரங்களும் மிண்டிக்கொண்டு நெருக்கமாக இங்கு இருக்கும்.
எனவே இரவில் வரவேண்டாம்.

நெய்தல்
கணிமேதாவியார் இயற்றிய திணைமாலை நூற்றைம்பது
யாப்பு – வெண்பா
காலம் – சங்கம் மருவிய கி. பி. மூன்றாம் நூற்றாண்டு.


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி