Sunday, 2 April 2017

திணைமாலை நூற்றைம்பது 60 TinaiMalai 60

திரையலறிப் பேராத் தெழியாத் திரியா
கரையலவன் காலினால் காணாக் -  கரையருகே
நெய்தல் மலர்கொய்யும் நீள்நெடுங் கண்ணினாள்
மையல் நுளையர் மகள்.                60
பாங்கற்குத் தலைமகன் கூறியது
கடலலைகள் வந்து பெயர்ந்து மணலைத் கொழித்துப் பெயரும்.
காலினால் கரையேறி வரும் நண்டைப் பார்த்துக்கொண்டே நெய்தல் மலரைப் பறித்துக்கொண்டு அவள் கரையருகில் இருப்பாள்.
அந்த நீண்ட நெடிய கண்ணினை உடைய அவள் எனக்கு மயக்கம் தரும் நுளையர்-மகள். (மீனவப்பெண்)

நெய்தல்
கணிமேதாவியார் இயற்றிய திணைமாலை நூற்றைம்பது
யாப்பு – வெண்பா
காலம் – சங்கம் மருவிய கி. பி. மூன்றாம் நூற்றாண்டு.


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி