Sunday, 2 April 2017

திணைமாலை நூற்றைம்பது 59 TinaiMalai 59

பகல்வரின் கவ்வை பலவாம் பரியாது
இரவரின் ஏதமும் அன்ன புகவரிய
தாழை துவளும் தரங்க நீர்ச் சேர்ப்பிற்றே
ஏழை நுளையர் இடம்.                       59
'இப்பொழுது வாரல்!' என்று, வரைவு கடாயது
நீ இவளை அடைய,
பகலில் வரின் ஊர் தூற்றும் கௌவை பலவாகப் பெருகும்.
இரவில் வரின் உனக்கு நேரும் இன்னலும் அது போலவே பலவாகப் பெருகும்.
கடந்து வர முடியாமல் தாழை மரத்தில் அலைகள் இங்கு மோதிக்கொண்டிருக்கும்.
இப்படிப்பட்ட சேர்ப்பு நிலமாயிற்றே, ஏழைகளாகிய நுளையர் (மீனவர்) நாங்கள் வாழும் இடம்.

நெய்தல்
கணிமேதாவியார் இயற்றிய திணைமாலை நூற்றைம்பது
யாப்பு – வெண்பா
காலம் – சங்கம் மருவிய கி. பி. மூன்றாம் நூற்றாண்டு.


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி