Sunday, 2 April 2017

திணைமாலை நூற்றைம்பது 58 TinaiMalai 58

மாயவனும் தம்னும் போலே மறிகடலும்
கானலும்சேர் வெண்மணலும் காணாயோ - கானல்
இடையெலாம் ஞாழலும் தாழையும் ஆர்ந்த
புடையெலாம் புன்னை புகன்று              58
தலைமகற்குத் தோழி பகற்குறி நேர்ந்து, இடம் காட்டியது
மாயவனின் கருநிறத்தில் கடல்.
அவன் அண்ணன் பலராமனின் வெண்ணிறத்தில் கடல் சேர்ந்த மணல்.
அமன் கானல் இடைப்பகுதியில் ஞாழல், தாழை மரங்கள்.
அதன் பக்கமெல்லாம் புன்னை மரங்கள்.
அந்த இடத்தைக் கண்டதில்லையா?
அங்கு வரலாமே.

நெய்தல்
கணிமேதாவியார் இயற்றிய திணைமாலை நூற்றைம்பது
யாப்பு – வெண்பா
காலம் – சங்கம் மருவிய கி. பி. மூன்றாம் நூற்றாண்டு.


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி