Sunday, 2 April 2017

திணைமாலை நூற்றைம்பது 57 TinaiMalai 57

வருதிரை தானுலாம் வார்மணல் கானல்
ஒருதிரை ஓடா அளவை இருதிரை
முன்வீழும் கானல் முழங்கு கடல்சேர்ப்ப
என்வீழல் வேண்டா இனி.                             57
தோழி வரைவு கடாயது
வரும் கடலலை தானே வந்து உலாவும் நீண்ட மணல் பரப்பை உடைய கானல் நிலம் இது.
இதில் கடலின் ஒரு அலை மோதித் திரும்பி ஓடுவதற்கு முன்பாகவே இரண்டு அலைகள் வந்து மோதும்.
இப்படி முழங்கும் கடல் கானல் நிலச் சேர்ப்பனே,
இந்த அலையைப் போல என்மீது இனி நீ விழவேண்டாம்.
திருமணம் செய்துகொள். - தலைவி கூற்று.

நெய்தல்
கணிமேதாவியார் இயற்றிய திணைமாலை நூற்றைம்பது
யாப்பு – வெண்பா
காலம் – சங்கம் மருவிய கி. பி. மூன்றாம் நூற்றாண்டு.


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி