Sunday, 2 April 2017

திணைமாலை நூற்றைம்பது 56 TinaiMalai 56

கடற்கானல் சேர்ப்ப கழியுலாஅய் நீண்ட
அடல்கானல் புன்னை தாழ்ந்தாற்ற - மடற்கானல்
அன்றில் அகவும் அணிநெடும் பெண்ணைத்தெம்
முன்றில் இளமணல்மேல் மொய்த்து.              56
தலைமகற்கு இரவுக்குறி நேர்ந்த தோழி, இடம் காட்டியது
கடற்கானல் சேர்ப்பனே,
கடற்கழி நீரை மோதிக்கொண்டு அழிக்கும் கானல் நிலத்தில் புன்னை மரம் தாழ்ந்திருக்கும்.
மடலுக்கு உரித்தான அன்றில் அகவிக்கொண்டிருக்கும் அழகிய உயர்ந்த பனைமரம் அங்கு இருக்கும்.
அந்த இளமணல் முற்றம் கொண்டதுதான் நாங்கள் வாழும் இல்லம்.  

நெய்தல்
கணிமேதாவியார் இயற்றிய திணைமாலை நூற்றைம்பது
யாப்பு – வெண்பா
காலம் – சங்கம் மருவிய கி. பி. மூன்றாம் நூற்றாண்டு.


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி