Sunday, 2 April 2017

திணைமாலை நூற்றைம்பது 55 TinaiMalai 55

கண்பரப்பக் காணாய் கடும்பனி கால்வல்தேர்
மண்பரக்கும் மாயிருள் மேற்கொண்டு மண்பரக்கு
மாறுநீர் வேலை நீவாரல்! வரினாற்றாள்
ஏறுநீர் வேலை எதிர்.          55
தலைமகற்குத் தோழி குறை நேர்ந்து, பகற்குறியிடம் அறியச் சொல்லியது
கண்ணோட்டத்தை விரித்துக் காணாய்.
கடுமையான பனி பொழியும்போது உன் தேரின் வலிமையான சக்கரம் மண்ணில் பதியும்படி
கருமையான இருட்டு வேளையில்
நிலமெல்லாம் பரந்து விரியும் நீர்மை கொண்டதான கடலோர வழியில்
நீ வரவேண்டாம்.
வரின் இவள் தாங்கமாட்டாள்.
கடல் நீர் வந்தேறுவது போல அலர் வந்தேறுவதை இவள் தாங்கமாட்டாள்.

நெய்தல்
கணிமேதாவியார் இயற்றிய திணைமாலை நூற்றைம்பது
யாப்பு – வெண்பா
காலம் – சங்கம் மருவிய கி. பி. மூன்றாம் நூற்றாண்டு.


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி