Sunday, 2 April 2017

திணைமாலை நூற்றைம்பது 54 TinaiMalai 54

வாராய் வரின்நீர்க் கழிக்கானல் நுண்மணல்மேல்
தேரின்மா காலாழும் தீமைத்தே – ஓரிலோர்
கோணாடல் வேண்டா குறியறிவார்க் கூஉய்க்கொண்டோர்
நாணாடி நல்குதல் நன்று.              54
தலைமகற்குத் தோழி குறை நேர்ந்து, பகற்குறியிடம் அறியச் சொல்லியது
ஐய,
இரவில் வர வேண்டாம்.
வந்தால்,
நுண்ணிய மணலில் உன் தேரில் பூட்டிய குதியின் கால் புதையும் தீமை உண்டாகும்.
இவளும் நீயும் திருமணம் கொள்வதற்கு ஒத்த குடியினரா என்று பார்க்க வேண்டா.
குறி அறிந்தவர்களை அழைத்துக்கொண்டு நல்ல நாள் பார்த்து திருமணத்தால் இவளுக்கு நீ அளி செய்தல் வேண்டும்.
தோழி தலைவனிடம் சொல்கிறாள்.  

நெய்தல்
கணிமேதாவியார் இயற்றிய திணைமாலை நூற்றைம்பது
யாப்பு – வெண்பா
காலம் – சங்கம் மருவிய கி. பி. மூன்றாம் நூற்றாண்டு.


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி