Sunday, 2 April 2017

திணைமாலை நூற்றைம்பது 53 TinaiMalai 53

பாறு புரவியா பல்களிறு நீள்திமிலா
தேறு திரைபறையா புள்படையாlf - தேறாத
மன்கிளர்ந்த போலும் கடல்சேர்ப்ப மற்றெமர்
முன்கிளர்ந்து எய்தல் முடி                           53
தலைமகற்குத் தோழி குறை நேர்ந்து, பகற்குறியிடம் அறியச் சொல்லியது
கடலில் இரை தேடும் பருந்துகள் போர்க் குதிரைக் ஆக
மீன் பிடிக்கும் திமில்கள் போர் யானைகள் ஆக
ஒலிக்கும் அலைகள் போர்ப்பறை ஆக
இறை தேடும் பறவைகள் படைகள் ஆக
தெளிவில்லாத மன்னன் போருக்கு எழுவது போன்று கடல் முழங்கும் சேர்ப்பு நிலத்தின் தலைவனே
எம்மைச் சேர்ந்தவர்களிடம் பெண் கேட்டு வந்து உன் எண்ணத்தை நிறைவேற்றிக்கொள்.

நெய்தல்
கணிமேதாவியார் இயற்றிய திணைமாலை நூற்றைம்பது
யாப்பு – வெண்பா
காலம் – சங்கம் மருவிய கி. பி. மூன்றாம் நூற்றாண்டு.


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி