Sunday, 2 April 2017

திணைமாலை நூற்றைம்பது 52 TinaiMalai 52

திரைபாகன் ஆகத் திமில்களிறு ஆக
கரைசேர்ந்த கானல் படையா - விரையாது
வேந்து கிளர்ந்தன்ன வேலைநீர்ச் சேர்ப்பநாள்
ஆய்ந்து வரைதல் அறம்.                52
தலைமகனைத் தோழி வரைவு கடாயது
கடல் அலை யானைப் பாகன் ஆக
மீன் பிடிக்கும் திமில் பாகனின் போர்-யானை ஆக
கரைக்கு வந்து சேரும் பொருள்கள் படைகளாக
வேந்தன் விரைவின்றி உலா வருவது போலத் தோன்றும் கடல்நீர் மோதும் சேர்ப்பு நிலத்தின் தலைவனே
நல்ல நாள் பார்த்து இவளைத் திருமணம் செய்துகொள்வது அறமாகும்.

நெய்தல்
கணிமேதாவியார் இயற்றிய திணைமாலை நூற்றைம்பது
யாப்பு – வெண்பா
காலம் – சங்கம் மருவிய கி. பி. மூன்றாம் நூற்றாண்டு.


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி