Sunday, 2 April 2017

திணைமாலை நூற்றைம்பது 51 TinaiMalai 51

கடும்புலால் வெண்மணல் கானல் உறுமீன்கண்
படும்புலால் பார்த்தும் பகர்தும் - அடும்பெலாம்
சாலிகை போல்வலை சாலப் பலவுணங்கும்
பாலிகை பூக்கும் பயின்று.                            51
தலைமகற்குத் தோழி குறை நேர்ந்து, பகற்குறியிடம் அறியச் சொல்லியது
கடுமையான புலால் நாற்றம் அடிக்கும் வெள்ளை மணலைக் கொண்ட கானல் நிலத்தில்
காயவைத்திருக்கும் பெரிய மீன்களின் மீது உட்காரும் திருட்டுப் பறவைகளை ஓட்டிக்கொண்டும்
அந்த மீன்களை விலை பகர்ந்து விற்றுக்கொண்டும் இருப்போம்.
அடுப்பம் பூக்கள் முளைப்பாலிகை போல அங்குப் பூத்திருக்கும்.
மீன் பிடித்த வலைகள் ‘சாலிகை’ச் சட்டையை விரித்து வைத்திருப்பது போல அங்ககுக் காயும்.
அந்த இடத்துக்கு இவளை அடைய நீ வரலாம் – என்று தோழி தலைவனிடம் சொல்கிறாள்.

நெய்தல்
கணிமேதாவியார் இயற்றிய திணைமாலை நூற்றைம்பது
யாப்பு – வெண்பா
காலம் – சங்கம் மருவிய கி. பி. மூன்றாம் நூற்றாண்டு.


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி