Saturday, 1 April 2017

திணைமாலை நூற்றைம்பது 50 TinaiMalai 50

திமில்களி றாக திரைபறையா பல்புள்
துயில்கெடத் தோன்றும் படையாத் - துயில்போல்
குறியா வரவொழிந்து கோலநீர்ச் சேர்ப்ப
நெறியால்நீ கொள்வது நேர்.                        50
தோழி வரைவு கடாயது
மீன் பிடிக்கக் கடலில் செல்லும் திமில் யானையாக
கடலலை பறையாக
உடன் ஒலிக்கும் பறவைகள் படைவீரர்களாக
தூங்குவது போலக் குறிக்கோள் இல்லாமல் வருவதை விட்டுவிட்டு,
நீரலை கோலம் போடும் சேர்ப்பு நிலத் தலைவனே,
மணந்துகொள்ளும் நெறிமுறையோடு வருவது நேர்மையானது.

நெய்தல்
கணிமேதாவியார் இயற்றிய திணைமாலை நூற்றைம்பது
யாப்பு – வெண்பா
காலம் – சங்கம் மருவிய கி. பி. மூன்றாம் நூற்றாண்டு.


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி