Saturday, 1 April 2017

திணைமாலை நூற்றைம்பது 49 TinaiMalai 49

எங்கு வருதி இருங்கழித் தண்சேர்ப்ப
பொங்கு திரையுதைப்பப் போந்தொழிந்த - சங்கு
நரன்றுயிர்த்த நித்திலம் நள்ளிருள் கால்சீக்கும்
வரன்றுயிர்த்த பாக்கத்து வந்து                49
தலைமகற்கு இரவுக்குறி மறுத்தது
எங்கு வருகிறாய்?
அகன்ற கழிமுகம் கொண்ட தண்ணிய சேர்ப்பு நிலத் தலைவனே,
பொங்கும் கடலலை உதைத்துக் கொண்டுவந்து போட்டுவிட்டுத் திரும்பும் சங்கு, ஒலித்துப் பெற்றெடுத்த முத்து, நள்ளிரவு இருளில் ஒளி உண்டாக்கும் பாக்கம் ஆயிற்றே இவ்வூர்.
மக்கள் உன்னைக் கண்டால் அலர் தூற்றுவார்களே.

நெய்தல்
கணிமேதாவியார் இயற்றிய திணைமாலை நூற்றைம்பது
யாப்பு – வெண்பா
காலம் – சங்கம் மருவிய கி. பி. மூன்றாம் நூற்றாண்டு.


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி