Saturday, 1 April 2017

திணைமாலை நூற்றைம்பது 48 TinaiMalai 48

திரைமேல்போந் தெஞ்சிய தெண்கழிக் கானல்
விரைமேவும் பாக்கம் விளக்காக் - கரைமேல்
விடுவாய்ப் பசும்புற இப்பிகால் முத்தம்
படுவாய் இருளகற்றும் பாத்து.  48
தலைமகற்கு இரவுக்குறி மறுத்தது
கடலலை மேலேறி வந்து பின்வாங்கும் கடற்கழி கொண்ட கானல்
அங்கே மணம் பரப்பும் பாக்கமாகிய ஊர்
கரைமேல் கடலலை விட்டுச் சென்ற, பச்சை நிறம் புறத்தே கொண்ட இப்பி பெற்றடுக்கும் முத்துக்கள், ஊருக்கு விளக்காக இரவில் தோன்றும் இருளை அகற்றும்.
நீ இரவில் வந்தால் முத்து வெளிச்சத்தில் பிறர் உன்னைக் கண்டு அலர் தூற்றுவர் ஆதலால் இரவில் வரவேண்டாம்.

நெய்தல்
கணிமேதாவியார் இயற்றிய திணைமாலை நூற்றைம்பது
யாப்பு – வெண்பா
காலம் – சங்கம் மருவிய கி. பி. மூன்றாம் நூற்றாண்டு.


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி