Saturday, 1 April 2017

திணைமாலை நூற்றைம்பது 47 TinaiMalai 47

பண்ணாது பண்மேல் தேன்பாடும் கழிக்கானல்
எண்ணாது கண்டார்க்கே ஏரணங்கால் - எண்ணாது
சாவார்சான் றாண்மை சலித்திலா மற்றிவளைக்
காவார் கயிறுரீஇவிட் டார்.                        47
பாங்கன் தலைமகனைக் கண்டு, தலைமகளை வியந்து சொல்லியது
யாழில் இசை கூட்டாமல் தேனீக்கள் இசை பாடும் கழிக் கானலில்
கண்டவரை அழகால் கொல்லும் அணங்காகிய இவளைக் கண்டால்
சான்றாண்மையைச் சலிப்பில்லாமல் கடைப்பிடிப்போரும் செத்தொழிவர் என்று எண்ணிக் காக்காமல்,
இவளைக்
கட்டிய கயிற்றை அவிழ்த்து விட்டிருக்கின்றனர்.

காவார் கயிறுரீவிட் டார் – அளபெடை அலகு பெறவில்லை.

நெய்தல்
கணிமேதாவியார் இயற்றிய திணைமாலை நூற்றைம்பது
யாப்பு – வெண்பா
காலம் – சங்கம் மருவிய கி. பி. மூன்றாம் நூற்றாண்டு.


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி