Saturday, 1 April 2017

திணைமாலை நூற்றைம்பது 46 TinaiMalai 46

தந்தாயல் வேண்டாவோர் நாள்கேட்டுத் தாழாது
வந்தால்நீ எய்துதல் வாயால்மற் - றெந்தாய்
மறிமகர வார்குழையாள் வாழாள்நீ வாரல்
எறிமகரம் கொட்கும் இரா.             46
தோழி நெறி விலக்கி, வரைவு கடாயது
வல்லவரைக் கொண்டுவந்து திருமணத்துக்கு நாள் கேட்டு நீ ஆராயவேண்டாம்.
காலம் தாழ்த்தாமல் திருமணம் செய்துகொள்ள வந்தால் நீ இவளைப் பெறுதல் உறுதி.
அவ்வாறன்றி,
என் தந்தை போன்றவனே,
வளைந்த மகரமீன் அணிகலன் சூடியிருக்கும் கூந்தலை உடைய இவள், எறியும் சுறாமீன் வளைந்து பாயும் இரவில் நீ வந்தால், உயிர் வாழமாட்டாள்.

நெய்தல்
கணிமேதாவியார் இயற்றிய திணைமாலை நூற்றைம்பது
யாப்பு – வெண்பா
காலம் – சங்கம் மருவிய கி. பி. மூன்றாம் நூற்றாண்டு.


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி