Saturday, 1 April 2017

திணைமாலை நூற்றைம்பது 45 TinaiMalai 45

தாழை தவழ்ந்துலாம் வெண்மணல் தண்கானல்
மாழை நுளையர் மடமகள் ஏழை
இணைநாடில் இல்லா இருந்தடங்கண் கண்டும்
துணைநாடி னன்தோம் இலன்                45
தலைமகன் சொல்லிய குறி வழி அறிந்து, தலைமகளைக் கண்ட பாங்கன் தலைமகனை வியந்து சொல்லியது
தாழை மரம் தவழ்ந்து காற்றில் உலவும் வெண்மணலைக் கொண்ட தண்ணிய கானல் பரப்பில்,
மீனவரின் பொன்மகளாகிய இவள் மடமகள். மென்மையானவள்.
ஆராய்ந்து பார்க்கும்போது இணையில்லா இரண்டு விசாலமான கண்களைக் கொண்டவள்.
இந்தக் கண்களைக் கண்டுதான் இவளைத் துணைவியாக்கிக் கொள்ள என் தலைவன் விரும்பினான்.
எனவே அவன் குற்றமற்றவன்.

நெய்தல்
கணிமேதாவியார் இயற்றிய திணைமாலை நூற்றைம்பது
யாப்பு – வெண்பா
காலம் – சங்கம் மருவிய கி. பி. மூன்றாம் நூற்றாண்டு.


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி