Saturday, 1 April 2017

திணைமாலை நூற்றைம்பது 44 TinaiMalai 44

கடும்புலால் புன்னை கடியும் துறைவ
படும்புலால் புள்கடிவான் புக்கத் தடம்புல்லாம்
தாழைமா ஞாழல் ததைந்துயர்ந்த தாழ்பொழில்
ஏழைமான் நோக்கி இடம்.             44
பகற்குறியிடம் காட்டியது
பெருமளவில் வீசும் கவிச்சல் நாற்றத்தைப் புன்னைப் பூக்கள் உதிர்ந்து போக்கும் துறையை உடையவனே,
இவள் மீன் புலாலைக் கவர வரும் பறவைகளை ஓட்டிக்கொண்டிருப்பாள்.
பெரிய ‘புல்’ இனத் தாழை, மாமை நிற ஞாழல் மரங்கள் நெருங்கி வளர்ந்திருக்கும் ‘பொழில்’ ஒன்று இருக்கும்.
எளிய மான் போல நோக்கும் இவள் இருக்குமிடம் இதுதான்.
தோழி தலைவனுக்குக் குறியிடம் சுட்டுகிறாள்.

நெய்தல்
கணிமேதாவியார் இயற்றிய திணைமாலை நூற்றைம்பது
யாப்பு – வெண்பா
காலம் – சங்கம் மருவிய கி. பி. மூன்றாம் நூற்றாண்டு.


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி