Saturday, 1 April 2017

திணைமாலை நூற்றைம்பது 43 TinaiMalai 43

கடற்கோ டிருமருப்புக் கால்பாக னாக
அடற்கோட் டியானை திரையா - உடற்றிக்
கரைபாய்நீள் சேர்ப்ப கனையிருள் வாரல்
வரைவாய்நீ யாகவே வா                43
தலைமகனைத் தோழி வரைவு கடாயது
கடல் கோடு (சங்கு) – யானையின் இரண்டு கொம்புகளாக
கால் (காற்று) – பாகனாக
திரை (அலை) – போரிடும் யானையாக
துன்புறுத்திக் கரையில் பாயும் நீண்ட சேர்ப்பு நிலத் தலைவனே,
மிகுந்த இருளில் இவளுக்காக வர வேண்டாம்.
வந்துதான் ஆகவேண்டும் என்றால், திருமணம் செய்துகொள்வதற்காக வா.
தோழி தலைவனிடம் சொல்கிறாள்.

நெய்தல்
கணிமேதாவியார் இயற்றிய திணைமாலை நூற்றைம்பது
யாப்பு – வெண்பா
காலம் – சங்கம் மருவிய கி. பி. மூன்றாம் நூற்றாண்டு.


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி