Saturday, 1 April 2017

திணைமாலை நூற்றைம்பது 42 TinaiMalai 42

கவளக் களிப்பியல் மால்யானை சிற்றாளி
தவழத்தான் நில்லா ததுபோல் - பவளக்
கடிகையிடை முத்தம் காண்தொறும் நில்லா
தொடிகை யிடைமுத்தம் தொக்கு.                      42
நயப்பு; கையுறையும் ஆம்
உணவுக் கவளங்களை உண்ட களிப்பில் மிதக்கும் மதம் கொண்ட யானை சிங்கத்தின் குட்டி தன்மேல் தவழ்ந்தாலும் நில்லாமல் ஓடும்.
அதுபோல
அவளது வாயாகிய பவளப் பெட்டியில் இருக்கும் பற்களாகிய  முத்துக்களைக் காணும்போது அவளுக்குக் கையுறைப் பரிசுப் பொருளாக நான் கொண்டுவந்த பவள வளையலில் உள்ள முத்துக்கள் அவளது பல் முத்துக்களுக்கு ஈடாக நிற்க மாட்டா.  

நெய்தல்
கணிமேதாவியார் இயற்றிய திணைமாலை நூற்றைம்பது
யாப்பு – வெண்பா
காலம் – சங்கம் மருவிய கி. பி. மூன்றாம் நூற்றாண்டு.


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி