Saturday, 1 April 2017

திணைமாலை நூற்றைம்பது 41 TinaiMalai 41

உருகுமால் உள்ளம் ஒருநாளும் அன்றால்
பெருகுமால் நம்மலர் பேணப் - பெருகா
ஒருங்குவால் மின்னோ டுருமுடைத்தாய்ப் பெய்வான்
நெருங்குவான் போல நெகிழ்ந்து.           41
தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழியால் சொல் எடுக்கப்பட்டு, தலைமகள் தனது ஆற்றாமையால் சொல்லியது
உள்ளம் உருகுகிறது.
ஒருநாள் அன்று; பலநாள் உருகுகிறது.
நம்மைப் பற்றி அலர் தூற்றுவது பெருகுகின்றது.
வானம் ஒன்று திரண்டு பெருகி, மின்னலும் இடியுமாக மழை பொழிய நெருங்குவது போன்று நெகிழ்ச்சியுடன் அலர் பெருகுகிறது.

நெய்தல்
கணிமேதாவியார் இயற்றிய திணைமாலை நூற்றைம்பது
யாப்பு – வெண்பா
காலம் – சங்கம் மருவிய கி. பி. மூன்றாம் நூற்றாண்டு.


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி