Saturday, 1 April 2017

திணைமாலை நூற்றைம்பது 40 TinaiMalai 40

தன்றுதுணையோ டாடும் அலவனையும் தான்நோக்கா
இன்றுணையோ டாட இயையுமோ - இன்றுணையோ
டாடினாய் நீயாயின் அந்நோய்க்கென் நொந்தென்று
போயினான் சென்றான் புரிந்து.                40
வலிதாகச் சொல்லிக் குறை நயப்பித்தது
நண்டு தன் துணைநண்டோடு சேர்ந்து ஆடிக்கொண்டிருந்தது.
அதனையும் என்னையும் அவன் பார்த்தான்.
“என் துணையோடு நீ ஆட இயலுமா” என்று கேட்டான்.
“என் துணையோடு நீ ஆடாவிட்டால், அதனால் எனக்கு வரும் காதல் நோய்க்கு உன்னை ஏன் நொந்துகொள்ள வேண்டும்?” என்று சொல்லிவிட்டு விருப்பத்தோடு போய்விட்டான்.

நெய்தல்
கணிமேதாவியார் இயற்றிய திணைமாலை நூற்றைம்பது
யாப்பு – வெண்பா
காலம் – சங்கம் மருவிய கி. பி. மூன்றாம் நூற்றாண்டு.


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி