Saturday, 1 April 2017

திணைமாலை நூற்றைம்பது 39 TinaiMalai 39

தந்தார்க்கே ஆமால் தட மென்தோள் இன்னநாள்
வந்தார்க்கே ஆம்என்பார் வாய்காண்பாம் - வந்தார்க்கே
காவா இளமணல் தண்கழிக் கானல்வாய்ப்
பூவா இளஞாழல் போது. 39
நொதுமலர் வரைந்து புகுந்த பருவத்து, தோழி செவிலிக்கு அறத்தொடு நின்றது
ஞாழல் பூவை எனக்குத் தந்தவர்க்கே என் தோள் உரியதாகும்.
இன்று மணம் பேசி வந்தவர்க்கு ஆம் என்று கூறுகின்றனர்.
அவர்களின் வாய்ப்பேச்சின் வல்லமையை நாம் கண்ணால் மட்டும் காண்போம்.
  • தன்னைக் காண வந்தவர்களுக்கு நிழல்-காப்புத் தராத இளமணல் சேர்ந்த தண்ணிய கழிக்கானல் வாயிலில் பூவாமல் இருந்த இள ‘ஞாழல்’ பூவினை எங்கிருந்தோ கொண்டுவந்து எனக்குத் தழையாடையாகத் தந்தார்க்கே என் தோள் உரியதாகும்


நெய்தல்
கணிமேதாவியார் இயற்றிய திணைமாலை நூற்றைம்பது
யாப்பு – வெண்பா
காலம் – சங்கம் மருவிய கி. பி. மூன்றாம் நூற்றாண்டு.


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி