Saturday, 1 April 2017

திணைமாலை நூற்றைம்பது 38 TinaiMalai 38

மாக்கடல்சேர் வெண்மணல் தண்கானல் பாய்திரைசேர்
மாக்கடல்சேர் தண்பரப்பன் மார்பணங்கா - மாக்கடலே
என்போலத் துஞ்சாய் இதுசெய்தார் யாருரையாய்
என்போலும் துன்பம் நினக்கு                      38
காமம் மிக்க கழிபடர் கிளவி
கருமையான கடலைச் சேர்ந்த வெண்மையான மணல் கொண்ட தண்ணிய கானலில் பாய்ந்து அலை மோதும் பெரிய கடல்நிலத் தண்பரப்பின் சேர்ப்பு நிலத் தலைவன்
தன் மார்பால் என்னை மயங்கச் செய்தான்.
அதனால் நான் தூங்கவில்லை.
அது சரி.
பெருங்கடலே. என்னைப் போல நீயும் தூங்கவில்லை.
எனக்குச் செய்தது போல உனக்குத் துன்பம் செய்தது யார், நீயே சொல்.
தலைவியின் மனக் கலக்கம்  

நெய்தல்
கணிமேதாவியார் இயற்றிய திணைமாலை நூற்றைம்பது
யாப்பு – வெண்பா
காலம் – சங்கம் மருவிய கி. பி. மூன்றாம் நூற்றாண்டு.


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி