Saturday, 1 April 2017

திணைமாலை நூற்றைம்பது 37 TinaiMalai 37

ஓதநீர் வேலி உரைகடியாப் பாக்கத்தார்
காதல்நீர் வாராமை கண்நோக்கி - ஓதநீர்
அன்றறியும் ஆதலால் வாரா தலரொழிய
மன்றறியக் கொள்ளீர் வரைந்து.              37
தோழி வரைவு கடாயது
அலை மோதும் நீரை வேலியாக உடைய பாக்கம் இந்த ஊர்.
இந்தப் பாக்கத்தார் காதல் நீர்மைக் கண்ணோட்டத்துடன் நோக்குவர்.
உனக்கும் அவருக்கும் இருந்த காதல் உறவை கடலலை நீர் அன்றே அறியும் ஆதலால், அக் கடலலை வந்து உங்கள் காதலைச் சொல்லாது என்பதையும்,
ஊர் மக்கள் அலர் நூற்றுவது ஒழியவேண்டும் என்பதையும் எண்ணி,
ஊர்மன்று அறியும்படியாகத் திருமணம் செய்துகொண்டு இவளைக் கொள்வாயாக.  
தோழி தலைவனுக்குச் சொல்கிறாள்.

நெய்தல்
கணிமேதாவியார் இயற்றிய திணைமாலை நூற்றைம்பது
யாப்பு – வெண்பா
காலம் – சங்கம் மருவிய கி. பி. மூன்றாம் நூற்றாண்டு.


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி