Friday, 31 March 2017

திணைமாலை நூற்றைம்பது 17 TinaiMalai 17

அறிகவளை ஐய இடைமடவாய் ஆய
சிறிதவள்செல் லெளிறுமென் றஞ்சிச் - சிறிதவள்
நல்கும்வாய் காணாது நைந்துருகி என்னெஞ்சம்
ஒல்கும்வாய் ஒல்கல் உறும்.    17

'நின்னால் சொல்லப்பட்டவளை அறியேனாலோ' என்ற தோழிக்குத் தலைமகன் அறிய உரைத்தது

அறிக அவளை, மென்மையான இடை, மடமொழி பேசும் வாய், ஆய்ந்து சிறிதே நகரும் நடைச்செலவு, எளிதாகிவிடும் என்று அஞ்சி சிறிதே மொழி நல்கும் அவள் வாய் ஆகியவற்றை உடையவள். அவளைக் காணாமல் என் நெஞ்சம் நைந்து உருகித் தளர்கிறது. மெலிந்தும் போகிறது. தன் காதலியின் தோழியிடம் தலைவன் கூறுகிறான்.   

குறிஞ்சி
கணிமேதாவியார் இயற்றிய திணைமாலை நூற்றைம்பது
யாப்பு – வெண்பா
காலம் – சங்கம் மருவிய கி. பி. மூன்றாம் நூற்றாண்டு.


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி