Friday, 31 March 2017

திணைமாலை நூற்றைம்பது 16 TinaiMalai 16

நாணாகம் நாறும் நனைகுழலாள் நல்கித்தன்
பூணாகம் நேர்வளவும் போகாது -  பூணாகம்
என்றேன் இரண்டாவ துண்டோ மடல்மாமேல்
நின்றேன் மறுகிடையே நேர்ந்து.            16

தோழி சேட்படுத்த இடத்து, தலைமகன் தனது ஆற்றாமையால் சொல்லியது

அன்று மலர்ந்த நாக மலரின் தேன் மணக்கும் கூந்தலை உடையவள் என் காதலி. அவளுடைய பூண் அணிந்த மார்பகத்தை எனக்குக் கொடுத்தால் அல்லாமல், எருக்க மாலையும் எலும்பு மாலையும் அணிந்த என் நெஞ்சு திரும்பிச் செல்லாது என்று கூறிவிட்டேன். இதனை மாற்றிச் சொல்லும் இரண்டாவது சொல் உண்டோ? இல்லை. இப்போது பனைமட்டைக் குதிரைமேல் தெருவில் நின்றுகொண்டிருக்கிறேன். தலைவன் தன் தோழனிடம் இவ்வாறு கூறுகிறான்.   

குறிஞ்சி
கணிமேதாவியார் இயற்றிய திணைமாலை நூற்றைம்பது
யாப்பு – வெண்பா
காலம் – சங்கம் மருவிய கி. பி. மூன்றாம் நூற்றாண்டு.


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி