Friday, 31 March 2017

திணைமாலை நூற்றைம்பது 15 TinaiMalai 15

வாடாத சான்றோர் வரவெதிர் கொண்டிராய்க்
கோடாது நீர்கொடுப்பின் அல்லது - கோடா
எழிலும் முலையும் இரண்டிற்கும் முந்நீர்ப்
பொழிலும் விலையாமோ போந்து        15

தலைமகன் சான்றோரை வரைவு வேண்டி விடுத்த இடத்து, தலைமகள் தந்தைக்கும் தனையன்மார்க்கும் நற்றாய் அறத்தொடு நின்றது

நம் குடும்பத் தகுதிக்குச் சற்றும் குறைவில்லாத சான்றோர் நம் மகளைத் திருமணத்துக்குப் பெண் கேட்டு வந்துள்ளனர். அவர்களை எதிர்கொண்டு வரவேற்று, மனம் கோணாமல் நீர் நம் பெண்ணை அவர்களுக்குக் கொடுக்க வேண்டும். நம் மகளின் எழில், முலை இரண்டுக்கும் இந்த நிலவுலகில் உள்ள சோலைகள் அனைத்தும் கொடுத்தாலும் முலைவிலைப் பொருள் ஆகுமா?  தலைவியின் தாய் தன் கணவனிடம் சொல்கிறாள்.   

குறிஞ்சி
கணிமேதாவியார் இயற்றிய திணைமாலை நூற்றைம்பது
யாப்பு – வெண்பா
காலம் – சங்கம் மருவிய கி. பி. மூன்றாம் நூற்றாண்டு.


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி