Thursday, 30 March 2017

திணைமாலை நூற்றைம்பது 14 TinaiMalai 14

வருக்கை வளமலையுள் மாதரும் யானும்
இருக்கை இதண்மேலேம் ஆக பருக்கைக்
கடாஅம்மால் யானை கடிந்தானை அல்லால்
தொடாஅவால் என்தோழி தோள்.          14

செவிலிக்குத் தோழி அறத்தொடு நின்றது

வருக்கைப் பலாவின் வளம் மிகுந்த மலையில் விளையாட்டுத் தோழிமாரும் யானும் என் தோழியாகிய உன் மகளும் பரண் இருக்கை மேல் இருந்துகொண்டு தினைப்புனம் காத்தபோது அங்கு வந்த பருத்த கைகளை உடைய யானையை ஒட்டியவனைத் தவிர என் தோழியின் தோள் தழுவாது.

குறிஞ்சி
கணிமேதாவியார் இயற்றிய திணைமாலை நூற்றைம்பது
யாப்பு – வெண்பா
காலம் – சங்கம் மருவிய கி. பி. மூன்றாம் நூற்றாண்டு.


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி