Thursday, 30 March 2017

திணைமாலை நூற்றைம்பது 13 TinaiMalai 13

ஒருவரைபோல் எங்கும் பலவரையும் சூழ்ந்த
அருவரை உள்ளதாம் சீறூர் வருவரையுள்
ஐவாய நாகம் புறமெல்லாம் ஆயுங்கால்
கைவாய நாகம்சேர் காடு.              13

நெறியினது அருமை கூறி, தோழி இரவுக்குறி மறுத்தது

தோழி தலைவனிடம் கூறுகிறாள்.
ஒரு மலையைப் போலப் பல மலைகள் சூழ்ந்திருக்கும் அரிய மலையில் எங்கள் சிற்றுர் உள்ளது.
நீ வரும் அந்த மலையில் ஐந்தலை நாகங்களும், யானைகளும் உள்ளன
எனவே இரவில் வர வேண்டாம்.
ஐ வாய நாகம் - ஐந்து தலை கொண்ட நாகப்பாம்பு
கை வாய நாகம் - கையை வாயின் பக்கத்தில் கொண்ட யானை

குறிஞ்சி
கணிமேதாவியார் இயற்றிய திணைமாலை நூற்றைம்பது
யாப்பு – வெண்பா
காலம் – சங்கம் மருவிய கி. பி. மூன்றாம் நூற்றாண்டு.


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி