Thursday, 30 March 2017

திணைமாலை நூற்றைம்பது 12 TinaiMalai 12

வேலனார் போக மறிவிடுக்க வேரியும்
பாலனார்க்கு ஈக பழியிலாள் பாலால்
கடும்புனலின் நீந்திக் கரைவைத்தாற் கல்லால்
நெடும்பணைபோற் றோணேராள் நின்று.                       12
வெறி விலக்கி, தோழி செவிலிக்கு அறத்தொடு நின்றது
வெறியாட்ட வந்த வேலன் திரும்பிப் போகட்டும்.
பலி கொடுக்க நிறுத்தப்பட்ட ஆட்டுக்குட்டியை விடுவித்து-விடுங்கள்.
முருகனுக்குப் படைக்க வைத்துள்ள தேனைச் சிறுவர்களுக்குக் கொடுங்கள்.
என் தலைவியாகிய உன் மகள் பழி ஒன்றும் இல்லாதவள்.
விதி வயத்தால் வெள்ளத்தில் தத்தளித்த என் தலைவியாகிய உன் மகளை நீந்திக் கரை சேர்த்தவனுக்கு அல்லாமல் நெடிய மூங்கில் போன்ற தன் தோளைத் தரமாட்டாள்.  

குறிஞ்சி
கணிமேதாவியார் இயற்றிய திணைமாலை நூற்றைம்பது
யாப்பு – வெண்பா
காலம் – சங்கம் மருவிய கி. பி. மூன்றாம் நூற்றாண்டு.


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி