Monday, 27 February 2017

திணைமாலை நூற்றைம்பது 9 TinaiMalai 9

வஞ்சமே என்னும் வகைத்தாலோர் மாவினாய்
தஞ்சம் தமியனாய்ச் சென்றேனென் நெஞ்சை
நலங்கொண்டார் பூங்குழலாள் நன்றாயத் தன்றென்
வலங்கொண்டாள் கொண்டாள் இடம்.              9
பாங்கற்குத் தலைமகன்
தலைமகளைக் கண்ட வகை கூறி,
தன் ஆற்றாமை மிகுதி சொல்லியது

வஞ்சம் போன்ற ஒரு வகையில், தப்பி ஓடிய மான் ஒன்றை வினவிக்கொண்டு அவளிடம் தஞ்சம் புகுவேன் போலத் தனியனாகச் சென்றேன்.
அவள் என் நெஞ்சின் நலம் எல்லாவற்றையும் பிடுங்கி எடுத்துக்கொண்டாள்.
அவள் பூங்குழலாள்.
ஆயத்தாரோடு இருந்தாள்.
என் உடல், மன வலிமை எல்லாவற்றையும் எடுத்துத் தன்னிடம் வைத்துக்கொண்டாள்.  

குறிஞ்சி
கணிமேதாவியார் இயற்றிய திணைமாலை நூற்றைம்பது
யாப்பு – வெண்பா
காலம் – சங்கம் மருவிய கி. பி. மூன்றாம் நூற்றாண்டு.



No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி