Monday, 27 February 2017

திணைமாலை நூற்றைம்பது 8 TinaiMalai 8

அவட்காயின் ஐவனம் காவல் அமைந்த(து)
இவட்காயின் செந்தினை காரேனல் இவட்காயின்
எண்ணுளவால் ஐந்திரண் தீத்தான்கொல் என்னாங்கொல்
கண்ணுளவால் காமன் கணை                  8
பின்னிலை முனியாது நின்ற தலைமகன் தோழியை மதி உடம்படுத்தது

இவளது தாயாகிய அவள் அங்கே ஐவன நெல்லைக் காயவைத்துக்கொண்டிருப்பாள்.
இவளுக்கு இங்கே ஆனதோ செந்நிறத் தினையும், கருநிறத் தினையும் காத்தல்.
இவள் என்னைச் சினந்தால் என் நிலைமை என்ன ஆகும்?
காமன் ஐந்து மலரம்புகளை என்மீது எய்கிறான்.   
இவளது இரண்டு கண்கள் என்னைத் தாக்குகின்றன.
என் நிலைமை என்ன ஆகும்?
தலைவியைத் தரும்படித் தோழியைத் தலைவன் வேண்டுகிறான்.

குறிஞ்சி
கணிமேதாவியார் இயற்றிய திணைமாலை நூற்றைம்பது
யாப்பு – வெண்பா
காலம் – சங்கம் மருவிய கி. பி. மூன்றாம் நூற்றாண்டு.



No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி