Monday, 27 February 2017

திணைமாலை நூற்றைம்பது 7 TinaiMalai 7

கறிவளர் பூஞ்சாரல் கைந்நாகம் பார்த்து
நெறிவளர் நீள்வேங்கை கொட்கும் - முறிவளர்
நன் மலை நாட இரவரின் வாழாளால்
நன்மலை நாடன் மகள்.                   7
இரவுக்குறி வேண்டிய தலைமகற்குத் தோழி மறுத்துச் சொல்லியது

மிளகுக் கொடி வளர்ந்திருக்கும் அழகிய மலைச் சாரலில் யானையைப் (கைந்நாகம்) பார்த்து அந்த வழியே செல்லும் நீண்ட உடல் கொண்ட வேங்கைப் புலி அதனை வீழ்த்தச் சுழன்றுகொண்டிருக்கும் தளிர் மிக்க நல்ல மலையின் தலைவனே!
நீ இரவில் வந்தால் உன் இடர்ப்பாடுகளை நினைத்துக்கொண்டு இவள் உயிர் வாழ மாட்டாள்.
இவள் நற்குணமுள்ள மலைநாடனின் மகள் அல்லவா?

குறிஞ்சி
கணிமேதாவியார் இயற்றிய திணைமாலை நூற்றைம்பது
யாப்பு – வெண்பா
காலம் – சங்கம் மருவிய கி. பி. மூன்றாம் நூற்றாண்டு.



No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி