Monday, 27 February 2017

திணைமாலை நூற்றைம்பது 6 TinaiMalai 6

மால்நீலம் மாண்ட துகிலுமிழ்வ(து) ஒத்தருவி
மால்நீல மால்வரை நாடகேள் -  மாநீலம்
காயும்வேற் கண்ணாள் கனையிருளில் நீவர
ஆயுமோ மன்றநீ ஆய்                       6
இரவுக்குறி வேண்டிய தலைமகற்குத் தோழி மறுத்துச் சொல்லியது

திருமாலின் நீல நிறம் நேர்த்தியான வெள்ளை ஆடையை உமிழ்வது போன்று நீலநிற மலை வெள்ளை அருவியைக் கொட்டும் மலை அது.
மயக்கம் தரும் நீல நிறம் உயர்ந்து தோன்றும் மலை அது.
இத்தகைய மலைநாட்டின் தலைவனே! கேள்.
மாமை நிறம் கொண்ட நீலமலர் போலவும் வேல் போலவும் கண்ணை உடையவள் உன் காதலி.
கம்மி இருக்கும் மிகுந்த இருளில் நீ இவளைத் தேடி வந்தால் உன் நிலைமையை ஆராய்ந்து தாங்கிக்கொண்டு இவளால் இருக்க முடியுமா?

குறிஞ்சி
கணிமேதாவியார் இயற்றிய திணைமாலை நூற்றைம்பது
யாப்பு – வெண்பா
காலம் – சங்கம் மருவிய கி. பி. மூன்றாம் நூற்றாண்டு.



No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி