Sunday, 26 February 2017

திணைமாலை நூற்றைம்பது 5 TinaiMalai 5

வினைவிளையச் செல்வம் விளைவதுபோல் நீடாப்
பனைவிளைவு நாம்எண்ண பாத்தித் தினைவிளைய
மையார் தடங்கண் மயிலன்னாய் தீத்தீண்டு
கையார் பிரிவித்தல் காண்            5
தலைமகன் சிறைப்புறத்தானாக,
தலைமகட்குச் சொல்லுவாளாய்,
தோழி செறிப்பு அறிவுறீஇயது

நல்வினைப் பயன் விளையும்போது செல்வம் பெருகும்.
அதுபோல்
காலம் நீடாமல் பனைமர உயரம் இன்பம் பெருகவேண்டும் என்று நான் விரும்பி எண்ணிக்கொண்டிருந்தேன்..
அப்போது பகுபடுத்திக் கொண்டு பாதி நாளிலேயே தினை விளைந்துவிட்டது.
கையில் நெருப்பு சுட்டது போல் தினை விரைவாக முற்றி அறுவடை ஆகிவிட்டது.
இனி நான் அவன் இன்பத்தைப் பெற  முடியாது.
மை பூசிய கண்ணை உடையவளே! மயில் போன்றவளே!
என் நிலைமை இப்படி ஆகிவிட்டதே.

குறிஞ்சி
கணிமேதாவியார் இயற்றிய திணைமாலை நூற்றைம்பது
யாப்பு – வெண்பா
காலம் – சங்கம் மருவிய கி. பி. மூன்றாம் நூற்றாண்டு.



No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி